தனது அயராத முயற்சியினால் நோயாளியின் அறைகளை கிருமிநீக்கம் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்து இலங்கை மாணவன் சாதனை.!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் பலரும் பலவித தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து தொடக்கம், கிருமிகளை அழிக்கும் இயந்திரங்கள் வரை பல வகையான தயாரிப்புக்களை பலரும் தயாரித்து வருகிறார்கள். எம்பிலிபிட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதான தனுஜ ஜெயவர்த்தன என்ற 13 வயது மாணவன் இரண்டு கருவிகளை வடிவமைத்துள்ளார்.அறைகளிற்குள் கிருமி நீக்கம் சிறிய இயந்திரமொன்றை உருவாக்கியுள்ளார். நோயாளியின் அறைக்குள் உள்ள வளியை சுத்தம் செய்யும் இந்த கருவி. வளியை தொடர்ந்து உள்ளீர்த்து, சுத்தம் செய்து வெளியேற்றும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த மாணவன் தன்னியக்கியில் இயங்கும் ரோபோ ஒன்றையும் உருவாக்கியுள்ளார். நோயாளிக்கு மருந்து, உணவை இந்த ரோபோ எடுத்துச் செல்லும்.
அட்டைப் பலகைகளில் தயாரிக்கப்பட்ட இந்த கருவிகள் இன்னும் சோதனை நிலையில் உள்ளன. மேலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் இவற்றை உற்பத்தி செய்வோம் என்று நம்புகிறோம் என்று தனுஜ மேலும் தெரிவித்துள்ளார்.