இலங்கையில் 500 ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்.!! மேலும் நான்கு பேர் பலி..!!

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கேகாலையைச் சேர்ந்த 39 வயது ஆண், கொழும்பு 8 ஐ சேர்ந்த 67 வயது ஆண், கொழும்பு 10 ஐ சேர்ந்த 81 வயது ஆண் மற்றும் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் உள்ளிட்ட நான்கு பேரே இன்று உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.