வேல்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய ராட்சத உயிரினம்..!! இதுவரையில் இப்படி ஒன்றை உலகம் பார்த்ததே இல்லையாம்..!!

23 அடி நீளம், 4000 கிலோ எடை கொண்ட கடல்வாழ் உயிரினம் ஒன்று இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் கடற்கரை அருகே கரை ஒதுங்கியுள்ளது.


இந்த உயிரினத்துக்கு உடல் இருந்தாலும் முகம் இல்லை.முகம் இல்லாதது மற்ற பிற உயிரினங்களில் இருந்து வேறுபடும் வைகையாக உள்ளது. பெம்பிரோக்ஷைர் என்ற பகுதியில் உள்ள பிராட் ஹெவன் சவுத் பீச்சில் கடந்த வாரத்தில் இந்த உயிரினம் கரை ஒதுங்கியிருக்கிறது.
தற்போது இந்த உயிரினத்துக்கு உயிர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராட்சச அலையில் சிக்கி கடலில் இருந்து இந்த உயிரினம் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.இந்த என்ன வகையான உயிரினம் என்பதே இன்னும் தெரியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.புதிதாக கண்டறியப்பட்டுள்ள உயிரினம் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.