இலங்கையின் முக்கிய வைத்தியசாலையின் ஒரே பகுதியில் 34 பேருக்கு கொரோனா!! இழுத்து மூடப்பட்டது விடுதி..!!

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அ்ந்த விடுதியில் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், ஏழு துணை வைத்தியர்கள், இரண்டு சுகாதார பணியாளர்கள் மற்றும் 22 நோயாளிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஒரு நோயாளி மற்றும் தாதி கொரோனா தொற்றிற்கு உள்ளானது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 34 பேர் தொற்றிற்குள்ளாகியது கண்டறியப்பட்டது.இந்தச் சூழ்நிலை காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.