ஹரி- மேகன் தம்பதிகளை நோக்கிப் பாயும் தொலைபேசி அழைப்புக்கள்.!! ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் இளவரசர் பிலிப்..!!

பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இளவரசர் ஹரி மற்றும் மெகான் தம்பதிகள். நாளுக்கு நாள் அரச குடும்பம் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

புகழ்பெற்ற அமெரிக்க TV நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓபரா, இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில். பிரித்தானிய மகாராணியாரின் கணவர் பிலிப்(99) தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இருதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்றைய தினம் உயிர் காக்கும் அவசர சத்திர சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. அதன் பின்னர் அவர் தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று முன்னர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்கள்.இதனையடுத்து ஹரியின் தாத்தா உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், அரச குடும்பத்தை பற்றி அவதூறு பரப்புவதை சற்று நிறுத்துமாறு கடுமையான அழுத்தங்கள் பிரித்தானியாவில் இருந்து பிரயோகிக்கப்பட்டுள்ளது.மிகவும் சக்திவாய்ந்த பெரும் பின் புலம் கொண்ட நபர்கள், ஓபிராவை அணுகி நிகழ்சியை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும் பிரித்தானியாவின் உளவுத்துறை, மேல் மட்ட அதிகாரிகள் மற்றும் அரச குடும்பத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த நபர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 99 வயதாகும் தாத்தாவுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.