தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழ் கார்கில்ஸ் தியேட்டர் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் தியேட்டரில் பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர்களிற்கு தொற்று உறுதியானது.எழுமாற்றான பரிசோதனையில் அவர்கள் தொற்றிற்குள்ளானது கண்டறியப்பட்டது.
அது தவிர, உடுவில் பகுதியில் ஒருவர், யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையை சேர்ந்த ஒருவர், யாழ் மாநகரசபை பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இணைப்பு: 01:வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று வடமாகாணத்தில் 760 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதியானது.