இலங்கையில் மேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!!

நாட்டில் மேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80ஆயிரத்து 836ஆகப் பதிவாகியுள்ளது.அத்துடன், இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 84 ஆயிரத்து 226ஆகப் பதிவாகியுள்ளதுடன் அவர்களில், இன்னும் இரண்டாயிரத்து 906 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதேவேளை, நாட்டில் இதுவரை 484 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.