கொரோனா வைரஸ் அபாயத்தின் மத்தியில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட யாழ் ஆலயமொன்றின் பூசகர் மற்றும் பக்தர்களுக்கு நடந்த கதி..!!

கொரோனா வைரஸ் அபாயத்தின் மத்தியிலும் அரசாங்கத்தின் அறிவிப்புகளை மீறி உதாசீனம் செய்து கோயிலில் வழிபாடு நடத்திய ஆலயப் பூசகர் மற்றும் 18 பொதுமக்கள் நேற்று மாலை யாழ்ப்பாணப் பொலிஸாரானால் அதிரடியாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டனர்.

ஆலயத்தில் பூசை வழிபாடுகள் பெருமளவு பொதுமக்கள் மத்தியில் நடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் யாழ்ப்பாணம் நல்லூர் அத்தியடிப் பிள்ளையார் கோவிலில் சதுர்த்திப் பூசை வழிபாட்டில் ஈடுபட்ட 17பேரை ( ஆலய பிரதம குரு உட்பட) யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.பூசையில் கலந்து கொண்ட 17 பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். நீண்ட நேர விசாரணைகளின் பின்னர், பொலிஸார் அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து, இன்று அதிகாலை, விடுதலை செய்துள்ளதுடன், நீதிமன்றில் வழக்குத் தொடரவும் முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.