பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் வெளிநாடுகளிலிருந்து பரிசுப்பொதி அனுப்புவதாகக் கூறி அல்லது பணப்பரிசு கிடைத்துள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடிகள் இடம்பெறுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Present box opening with light rays inside

எனவே பேஸ்புக் உள்ளிட்டவற்றில் அறியாத நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளாக வேண்டாம் என குற்றம் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியங்க ஜயக்கொடி தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் கூறினார்.