யாழ். மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்துப் போராட்டம்..!! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பொலிஸார் முறுகல்..!!

யாழ். மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அநுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.