கோவிட் தொற்றை ஒழிக்க 20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்துத் தொகை மிக விரைவில் இலங்கைக்கு..!!

உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் 20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்துத் தொகை எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

இந்த வசதியின் மூலம் இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என விசேட மருத்துவ நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.இலங்கை விலைகொடுத்து வாங்கிய ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.ரஷ்யாவின் ஸ்புட்ணிக் தடுப்பு மருந்தும், சீனாவின் சைனாபார்ம் நிறுவனத்தின் தடுப்பு மருந்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இந்த நடைமுறை இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தியாகும்.
சுகாதார அமைச்சு முறையான வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பு மருந்தேற்றல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் விசேட மருத்துவ நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.