இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அசத்தல் வெற்றி..!!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில், அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிசங்க 39 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபேட் மெக்கோய் 2 விக்கெட்டுகளையும் கெவீன் சின்க்ளாயார், எட்வட்ஸ், ஹோல்டர், பிராவோ மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் 38 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இலங்கை அணியின் பந்துவீச்சில், அகில தனஞ்சய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.குறிப்பாக இப்போட்டியில் இலங்கையின் அணியின் அகில தனஞ்சய, ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.அத்துடன், இப்போட்டியில் கிய்ரன் பொலார்ட், இலங்கையின் அணியின் அகில தனஞ்சயவின் ஓவருக்கு ஆறு பந்;துகளுக்கு ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் ரி-20 கிரிக்கெட்டில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பொலார்ட் பதிவுசெய்தார்.முன்னதாக இந்தியாவின் யுவராஜ் சிங் இந்த சாதனையை பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிய்ரன் பொலார்ட் தெரிவுசெய்யப்பட்டார்.