மீண்டும் வேகமாக உருவெடுத்த கொரோனா பாதிப்பு.. அவசரமாக லொக்டவுணை அறிவித்த நாடு..!!

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் 3 வது கட்ட அலையாக பரவி வருகிறது.தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகள் ஓர் அளவு குறைந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பின்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.தற்போது மறுபடியும் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மார்ச் 8-ம் திகதி முதல் மார்ச் 28-ம் திகதி வரை நாடாளுமன்றம் உட்பட அனைத்து இடங்களும் மூடப்படும் என்றும், அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் பின்லாந்து அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 7,353 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.