கிளிநொச்சியில் பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்..ஒரு பிள்ளை சடலமாக மீட்பு..!! இரு பிள்ளைகளை மீட்க தொடர்ந்து தேடுதல்..!!

கிளிநொச்சி, வட்டக்கச்சியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் குறித்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த தாய் காப்பற்றப்பட்டுள்ளார்.ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.