தற்போது கிடைத்த செய்தி..யாழில் இன்று மூவருக்கு கொரோனா தொற்று..!!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையில் 126 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதில் ஒருவர் யாழ்.சிறைச்சாலை கைதி எனவும், மற்றொருவர் காரைநகரை சேர்ந்தவர், இவர் கடந்த வாரம் விடுதலையானவர்.3வது நபர் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்தவர் இவர் காரைநகர் வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வலைப்பாட்டுடன் தொடர்புடையவராவார். இதேவேளை யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் 255 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.