16 வயதுச் சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு இலங்கை நீதிமன்றம் கடூழியச் சிறைத் தண்டனை!!

பராயமடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டையில் வசிக்கும் 41 வயதான நபர், தனியார் குழந்தைகள் மையமொன்றில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்தச் சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.அதன் பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம்,சந்தேக நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
மேலும் ரூ. 10,000 அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.250,000 இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டது.இழப்பீட்டை செலுத்த தவறினால் மேலும் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டது.