யாழ். தீவுப்பகுதிகளில் சீன மின் உற்பத்தி வேலைத்திட்டம்..தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை..!!

யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளில் சீன மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பான தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றில் சீனா முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து வினவப்பட்ட போதே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.