யாழில் தீவிரமாகப் பரவும் கொரோனாவினால் இழுத்து மூடப்பட்ட சந்தை..!!

கொடிகாமம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


இதனை அடுத்து குறித்த பொதுச் சந்தை இன்று (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வடக்கில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் குறித்த வியாபாரியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.