தனது மிகச்சிறந்த ஓவியத்தினால் ஈழத்தமிழரின் அவலநிலையை உலகறிச் செய்த புலம்பெயர் தேசத்து தமிழ்ச் சிறுமி!! குவியும் பாராட்டுக்கள்..!

மிக அண்மையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமியொருவர் வரைந்த ஓவியம் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர்க் காவியமாய் உள்ள எம் புலத்து இளையோரே! எம் இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே.. ஈழத்து தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் தேசத்திலுள்ள வங்கியொன்று தனது
19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்திரியாவின் தலைநகரில் நடத்தியது.இதில், சுவிஸ் தேசத்தில் வாழும் சுமார் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.
இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் விதிமுறையாகும்.இதில், ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த எங்கள் ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஓவியமொன்றை வரைந்தாள்.

ஒரு ஓவியம் தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய் ஓவியமாக்கியவள் எங்கள் தமிழ்மகள் அபிர்சனா தயாளகுரு ஆவார்.சாதாரண வெற்றியுடன் நின்று விடாமல், முதலாம் பரிசினைத் தனதாக்கினாள் இவள்.மனதைப்பிழிந்த வலியை ஓவியமாக வரைந்தாள் இவள்.உங்கள் தமிழ் மகளே அபிர்சனா.. உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லை
புலத்தில் வாழும் ஈழத்து இளையோரே..வரலாற்றைப் படிப்பதுடன் நின்று விடாமல், புலம்பெயர் தேசங்களிலும் தமிழனின் அவலங்களை எடுத்துச் சென்று புதிய வரலாற்றைப் படையுங்கள்.

முகநூலிலிருந்து..

-நன்றி:கவிதரன்