வாகனப் பிரியர்களுக்கு ஓர் கவலையான செய்தி..பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி..!!

வாகன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 34, 475 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றன.எனினும், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3,256 ஆக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய, இந்த வருட ஜனவரி மாதத்தில் 195 மகிழுர்ந்துகளும், 78 சிற்றூர்ந்துகளும், 20 முச்சக்கரவண்டிகளும், 1, 228 உந்துருளிகளும் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.