எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவிட் தடுப்பூசியைச் செலுத்திய தமிழ் செவிலியர்..!!(வைரலாகும் காணொளி)

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். இந்த ஊசியை அவருக்கு செலுத்தியது பாண்டிச்சேரியை சேர்ந்த நிவேதா என்ற செவிலியர். செவிலியர் நிவேதா ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.இதில், முதல் கட்டமாக வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறான நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தாதி ஒருவரிடம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

காணொளி இணைப்பைப் பெறுவதற்கு இங்கே அழுத்துங்கள்..