நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய செய்தி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் தற்காலிகமாக அதிகளவான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் தென் மாகாணத்தின் கலலோர பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.