வடபகுதி தமிழ் மக்களுக்கு மிக மகிழ்ச்சி தரும் தகவல்..யாழ்-தென்னிந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்..!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று புதுடெல்லியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்தியாவின் சாகர் மால அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் திலிப் குமார் குப்தா மற்றும் இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவைகள் சார்பில் சீ. நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.