இலங்கையில் தயாரிக்கப்படும் கறுவா சிகரெட்டை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக பல்தேசிய சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளதாகவும், இலங்கையின் இந்த சிகரெட் தயாரிப்பை சந்தைப்படுத்துவதில் ஏற்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.சுமார் 6 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இந்த கறுவா சிகரெட் தயாரிக்க்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் 100 சிகரெட் தயாரிப்பு தொழிற்சாலைகளை ஆரம்பித்து, அவற்றை ஏற்றுமதி செய்து சுமார் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்த தொழிற்சாலைகள் ஊடாக, சுமார் ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.