நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளனது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் மொத்தமாக 45 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நோய்த் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 120 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 378 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.