க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மகளுக்கு தந்தையால் நேர்ந்த அவலம்

தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத தயாராகிய மகளின் அடையாள அட்டை, பரீட்சை அனுமதி பத்திரம் மற்றும் ஆடைகளை தந்தையால் தீயிட்டு எரிக்கப்பப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளின் உடமைகளை இவ்வாறு எரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 35 வயதான மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரான தந்தை கடந்த 27ஆம் திகதி குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியை தாக்கி உடமைகளுக்கு தீ வைத்துள்ளளார்

இதன்போது மாணவியின் பரீட்சைக்கு தேவையான பொருட்கள் தீ வைப்பட்டுள்ளதனை உறுதி செய்து பொலிஸார் வழங்கிய கடிதம் மூலம் அவருக்கு பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.