ஈவிரக்கமின்றி பச்சிளம் குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண் பொலிஸாரால் கைது..!!

யாழ்ப்பாணத்தில் தனது பிள்ளையை கொடூரமாக தாக்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாயினால் தனது 9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.யாழ்ப்பாணம், அரியாலை – நாவலடி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தையை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.குறித்த பெண் மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.