கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு..!

நாட்டில் புதிதாக 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.
சற்று முன்னர் வெளியான தகவலின் படி மேலும் 8 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இதுவரை 95 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.