நள்ளிரவில் தந்தையைக் கொலைக் செய்த மகன் பொலிஸாரால் கைது!! யாழில் நடந்த கொடூரச் சம்பவம்!

தந்தையை தாக்கி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கிராம மக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நிலாவரை புத்தூர்- இராசபாதை வீதியில் நேற்று (28) இரவு இந்தக் கொலை சம்பவம் நடந்தது.சீனிவாசம் (64) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.அவரது 33 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இன்று காலையில் சம்பவத்தை அறிந்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.பொலிசார் வருவதை அறிந்த மகன் வீட்டிலிருந்து தப்பியோடி விட்டார்.பின்னர் கிராமமக்கள் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.