இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக ரொம் மூடி நியமனம்..!!

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.டொம் மூடி எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து டொம் மூடி பணிப்பாளர் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டொம் மூடி செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது