டெங்குத் தொற்றினால் பரிதாபமாகப் பலியான இளம் பொதுச்சுகாதார பரிசோதகர்!!

பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பயாகல பகுதியில், பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றிய ருவித பண்டார என்பவர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.வைத்தியசாலையில் அவர் 11 நாள் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.