சாதாரண தரப் பரீட்சைகள் நாடு முழுவதிலும் நாளை ஆரம்பம்..கோவிட் தொற்று மாணவர்களுக்கு விசேட நிலையங்கள்.!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை 622,352 மாணவர்கள் சாதாரண தர பரீட்சை எழுதவுள்ளார்கள் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த பரீட்சை கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டது. இந்நிலையில், உரிய சுகாதார வழிக்காட்டலின் கீழ் நாளை பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.கோவிட்19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையம் ஒன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.