கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில், அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றது.இதன்படி, நேற்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில், அதிக அபாயம் உள்ள பகுதிகளை அடையாளங் காணுமாறு, மேல் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பிரதேச சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரிக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், நிரந்தர மற்றும் தற்காலிக முகவரிகளில் வசிக்கும் அனைவருக்கும், இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.