மிக வேகமாகப் பரவும் கொரோனா…ஒரே நாளில் 6,361பேர் பாதிப்பு..!!

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரே நாளில் 6,361பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 80,949ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 66பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 747ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 73,435பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 6,767 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.