இலங்கையில் கொரோனா தொற்றால் தாதியொருவர் இன்று மரணம்..!!

கோவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது தாதி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பிரியந்தி ரம்யாகுமாரி என்ற இந்த தாதி மாவனெல்லை ஆரம்ப வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார்.

கண்டி தாதியர் பயிற்சி கல்லூரியில் 98ஆம் ஆண்டு அணியில் கல்வியை பூர்த்தி செய்த இந்த தாதி கடந்த 2001 ஆம் ஆண்டு மாவனெல்லை ஆரம்ப வைத்தியசாலையில் சேவையில் இணைந்துள்ளார்.
அரச வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியர்களில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த இந்த தாதியின் மரணம் தொடர்பில் அரச தாதி அதிகாரிகள் சங்கம் தனது முகநூல் பக்கத்தில் அஞ்சலி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.