இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: அபாரமான சாதனை படைத்த இந்தியத் தமிழ் வீரர்..!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார்.அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.இந்தியக் கிரிக்கெட்டில் முன்னதாக கபில்தேவ், கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.அஹமதாபாத்- நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.