காணாமல் போன தமிழர்களின் உறவுகளுக்கு ஒர் நிம்மதி தரும் செய்தி..ஜனாதிபதி கோட்டாயவின் திடீர்த் தீர்மானம்..!!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் உறவினர்களை தேடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி விரைவில் சந்திக்க தயாராகுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இந்த குடும்பங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி உண்மையிலேயே உறுதியாக உள்ளார் என வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜெயனாத் கொலம்பகே, ஹிந்துக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து வீதியோரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மையை கோரி நான்கு ஆண்டுகால தொடர்ச்சியான போராட்டத்தில் இந்த குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.காணாமல் போனவர்களின் குடும்பங்களை சந்திக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.ஜனாதிபதி, அரசியல்வாதிகள் சொல்வதை கேட்பதற்கு பதிலாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சொல்வதை கேட்க தீர்மானித்துள்ளார்.அவர்களின் உண்மையான குறைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கவும் விரும்புகிறார். இது மிக விரைவில் நடக்கும்” என வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஜெயனாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.