இலங்கையில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா..!!மொத்த எண்ணிக்கை 467 ஆக உயர்வு..!

இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை சீதுவையிலுள்ள இராணுவ முகாமில் உள்ள 150 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.முகாமிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, முகாமை தனிமைப்படுத்தி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெலிசறை கடற்படை முகாமில் சுமார் 85 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.நேற்று அடையாளம் காணப்பட்ட 40 கொரோனா தொற்றுடையோரில், 20 பேர் வெலிசறை முகாமை சேர்ந்தவர்களாவர். அவர்களில் 10 பேர் முகாமில் நடந்த சோதனையில் கண்டறியப்பட்டனர். விடுமுறையில் இருந்த 10 பேர், அந்தந்த பகுதி வைத்தியசாலைகளின் மூலம் கண்டறியப்பட்டனர்.விடுமுறைக்கு சென்ற கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் பெண் இராணுவ வீராங்கனையும் உள்ளடங்குவார்.