இந்தியாவில் பள்ளிக்குச் சென்று திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த பிப்ரவரி 22-ஆம் திகதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். மதியம் 1.30 மணியளவில் ஆங்கில வகுப்புக்கு சென்றுவிட்டு மாலை 4 மணி அளவில் வழக்கமாக வீடு திரும்பும் மாணவி வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் அவர் பயின்று வந்த ஆங்கில வகுப்புக்கு சென்று பெற்றோர் விசாரித்துள்ளார்.



அங்கு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவரின் தோழியின் உறவினரான நபர் ஒருவர், தோழியின் வீட்டில் அவரை இறக்கிவிடுவதாக கூறி மோட்டார் சைக்கிளின் அழைத்து சென்றிருக்கிறார்.அதன் பின், அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் பணி புரிந்து வரும் ஹோட்டலுக்கு மாணவியை அழைத்து சென்றிருக்கிறார். அங்கு அவரும் அவருடைய நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
