கைத்தொலைபேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனை!! பிரான்ஸ் விஞ்ஞானிகள் சாதனை..!!

பிரான்ஸில் கைத்தொலைப்பேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனை செய்யும் முறைமையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
CORDIAL-1 என்ற பெயரில் 300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 சதவீதம் துல்லியமாக முடிவுகள் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.சளி மாதிரியை கண்டறியும் சிறிய கருவியை கைத்தொலைப்பேசியில் பொருத்தினால், அதன்மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.அடுத்தகட்டமாக 1000 பேருக்கு பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்பிறகும் அது வெற்றியளிக்கும் பட்சத்தில் இந்த முறை விஸ்தரிக்கப்படும்.