என் கர்ப்பத்திற்கு காற்று தான் காரணம்..!! வெறும் 15 நிமிடங்களில் பிள்ளையும் பிறந்தது எப்படி? அதிர வைக்கும் விசித்திரப் பெண்..!!

உடலுறவு கொள்ளாமல் குழந்தை பிறப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கான பதில் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.
உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.இன்ரர் நெட் உலகம் இல்லை என்றால் எதுவும் எங்களுக்கு தெரிய வராது என்பது தான் உண்மை.இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியின் சியாஜூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் சிதி சைனா (Siti Zainah). இவர் எப்பவும் போல சம்பவத்தன்று, பிரார்த்தனையை முடித்துவிட்டு, வீட்டில் வந்து உட்கார்ந்துள்ளார். தரையில் முகத்தை கீழே சாய்த்தவாறு படுத்திருந்திருக்கிறார். அப்போது, திடீர் என ஒரு காற்று (wind) அவரின் பிறப்புறுப்பு (vagina) வழியாக சென்று அவரின் வயிற்றை நிரப்பியுள்ளது. சற்று நேரத்தில் அவரது வயிறு பெரியதாக ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து, அடுத்த 15 ஆவது நிமிடத்தில் அவருக்கு ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை 2.9 கிலோகிராம் எடை கொண்டது. இந்த கர்ப்பத்துக்கு (pregnancy) காரணம் காற்று என்றும், உடலுறவு இல்லவே இல்லை என்றும் அடித்து சொல்கிறார் அந்த பெண்.இந்த விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து காவல்துறைக்கு, விஷயம் போனது. சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் விசாரித்தனர்.இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் இவருக்கு விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு யார் மூலமாவது அந்த பெண் கர்ப்பமாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உண்மை என்ன என்றால், இதை அறிவியலில் “cryptic pregnancy” என்று கூறுவார்கள். இந்த கருத்தரித்தலில் HCG என்ற ஹார்மோன் இல்லாததால், இயல்பாக இதை கருத்தரிப்பு கருவியால் கூட இதை கணிக்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏன், அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட இந்த கர்ப்பத்தை கணிக்க இயலாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவர் 4 மாதங்களுக்கு முன் தனது கணவருடன் கண்டிப்பாக உடலுறவு கொண்டிருப்பார்.அதன் மூலம் உருவானதுதான் இந்த குழந்தை. இப்படி கர்ப்பமான பெண்களுக்கு குழந்தை பிறக்க இருக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பது அவர்களுக்கு தெரியவரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இவர்களுக்கு, குழந்தை பிறக்க 10 முதல் 14 மாதங்கள் வரை ஆகலாம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அதுவரை இவர்கள் கர்பமாக இருப்பது அவர்களுக்கே தெரியாத நிலை காணப்படுமாம்.இதன் காரணத்தால் தான் குறித்த பெண் தன் மீது பட்ட காற்றை நம்புகிறார்.அதன் மூலம் தான் கர்ப்பமானதாக நினைக்கிறார். இதுவே நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.