இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் மரணம்!!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை பதிவாகிய மொத்த இறப்பு எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.அத்தோடு இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது.