தற்போது கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன எனவும் அவை அனைத்தையும் நம்பி பொது மக்கள் குழப்பமடையவோ அச்சமடையவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில், பாண் உட்பட பேக்கரி உற்பத்திகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் என்று கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் கிடையாது என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் விஷேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம விளக்கமளித்துள்ளார்.ஆனால், பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்யும் நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தால் அவற்றை வாங்குவோருக்கு வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால் விற்கும் நபர்கள் கையுரைகளைப் பாவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயல்பாடுகளையும், பொது மக்களும் உற்பத்தியாளர்களும் பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.