கொழும்பு மாநகர தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேச ஹொட்டலில் தங்கியிருந்த இளம் யுவதி திடீர் மரணம்..!!

வெள்ளவத்தை, கொலின்வூட் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இந்த யுவதி உயிரிழந்துள்ளார் என வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம, பெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த யுவதியுடன், திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே தங்கியிருந்துள்ளார்.சம்பவம் இடம்பெறும் தினத்திற்கு முன்னர் அந்த விடுதிக்கு குறித்த இருவரும் வந்தார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.யுவதி திடீரென சுகயீனம் அடைந்த நிலையில் அவருடன் தங்கியிருந்த இளைஞன் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சடலம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.