சாவகச்சேரி வைத்தியசாலைக்குள்ளும் நுழைந்தது கொரோனா..விடுதியில் தங்கியிருந்த நோயாளிக்கு தொற்று உறுதி..!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.அங்கு நாளாந்தம் சுமார் 20 வரையான நோயாளிகள் தங்கியிருந்துள்ளனர்.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பிசிஆர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இன்றைய பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது.மருத்துவ விடுதியில் பல நோயாளர்கள் தங்கியிருந்தமை, வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவதுறையினர் அங்கு வந்து சென்றமை போன்ற காரணங்களினால் பலர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.