பருத்தித்துறையில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அண்மையில், திருகோணமலையிலிருந்து பூசகர் ஒருவர் பருத்தித்துறைக்கு வந்திருந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியதையடுத்து, பருத்தித்துறையில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடஇந்து மகளிர் கல்லூரி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருந்தது.அவரது, கணவரான பூசகர், பிள்ளைகள் உள்ளிட்ட- அந்த 3 குடும்பத்தையும் சேர்ந்த 12 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.அத்துடன், புலோலியில் தேவாலயம் ஒன்றிற்கு சென்று வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது.அந்த தேவாலய நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு இன்று தொற்று உறுதியானது.