கொரோனாவை எதிர்த்து அர்ப்பணிப்புடன் போராடிய இரட்டைத் தாதிகளுக்கு நடந்த சோகம்..!!

சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் தாதிகளாக பணியாற்றிய இரட்டைத் தாதிகள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதான கேட்டி டேவிஸ் மற்றும் எம்மா டேவிஸ் ஆகிய இரட்டையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்தவந்த இருவரும் அண்மையில் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிவிற்கு மாற்றப்பட்டனர்.இதன்போது வைரஸ் தொற்றுக்குள்ளான இருவருக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி கேட்டி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எம்மா டேவிஸ் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து இவர்களது மற்றொரு சகோதரி ஜோயி டேவிஸ் கூறுகையில் ‘இருவரும் இந்த உலகிற்கு ஒன்றாகவே வந்தனர்.இப்போது ஒன்றாகவே உலகைவிட்டு போய்விட்டனர். பிறப்பும், இறப்பும் அவர்களை பிரிக்கவில்லை’ என கூறினார்.