ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம்..!! அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்..!!

கோவிட் தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பெருமளவிலான முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.