கொழும்பில் இருந்து சென்ற ரயில் மோதுண்டு பரிதாபமாகப் பலியான இளைஞன்.!!

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம, கத்தழுவ, கபலான ரயில் வீதியில் கொழும்பில் இருந்து பயணித்த சாகரிக்கா ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு ரயில் மோதுண்டமையினால் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் புறப்படும் போது, குறித்த இளைஞன் சைக்கிளில் கபலான வீதிக்கு வந்துள்ளார். ரயில் பயணிப்பதற்கு முன்னர் அவர் அந்த இடத்தை விட்டு அடுத்த பக்கம் செல்ல முயற்சித்தமையினால், ரயிலின் இறுதி பெட்டியில் மோதி உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் ஹேஷான் ஹர்ஷன என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். அவரது தந்தை காலி நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக செயற்பட்டு வருகின்றார்.
அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.