வேகமாக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா..நாடு எதிர்கொள்ளப் போகும் பொருளாதார நெருக்கடி!! நிபுணர்கள் கடும் எச்சரிக்கை..!!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கையின் ரூபா தற்போது வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களின் விலைகளும் எதிர்காலத்தில் வேகமாக அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இலங்கையின் பொருளாதாரத்திடம் இருக்கும் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள பாரதூரமான பற்றாக்குறையே இதற்கு காரணம்.இதன் காரணமாக எதிர்கால செலவுகளுக்கு அரசுக்கு சொந்தமான ஏதாவது ஒரு சொத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பைனை செய்து, அந்நிய செலாவணி கையிருப்பை ஈடு செய்யும் நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.